SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் வலைதளத்தில் அதிகரிக்கும் கலவர பதிவுகள் சைபர் க்ரைம் நடவடிக்கை எடுக்குமா?

2/27/2020 8:28:36 AM

உத்தமபாளையம், பிப்.27: தேனிமாவட்டத்தில் சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் சமூகநல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனை தனிக்கவனம் செலுத்தி சைபர் க்ரைம் தடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேனிமாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இந்நிலையில் டெல்லி கலவரம், பல்வேறு இடங்களில் நடக்ககூடிய ஆதரவு, எதிர்ப்பு பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் நடக்கிறது. இதனை முன்வைத்து சமீப காலமாக பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைத்தளங்களில் கலவரத்தை தூண்டும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தை கெடுத்திடும் வகையிலும் விஷம பதிவுகள் உலா வருகின்றன. தங்களது ஐ.டி.க்களில் தைரியமாக பதிவிடுவதும், சில போலி ஐ.டி.க்களை ஏற்படுத்தியும் பதிவுகள் உலாவருவது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி வருகிறது. இதனை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வரும் காலங்களில் பொது அமைதி கெடக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

சிறுமியர் ஆபாச வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்ககூடிய காவல்துறை அதிகாரிகள், எதற்காக பொது அமைதி கெடக்கூடிய வகையில் பதிவுகளையும், மீம்ஸ்களையும், வீடியோக்களையும் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் என்பது கேள்வியாக உள்ளது. சமூக வலைத்தளங்களை அதிகமாக மக்களும், இளைஞர்களும் பார்த்து வருகின்றனர். தமிழகத்தின் பாரம்பரியமிக்க சமுதாய நல்லிணக்கம், பொது அமைதி போன்றவைகளுக்கு இதுபோன்ற பதிவுகள் மிகவும் கேடாய் அமையப்போகிறது என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எனவே தேனி எஸ்.பி.முதலில் சமூகவலைத்தள கலவர பதிவுகளை கண்காணிக்க தேனி சைபர் க்ரைம் போலீசார்க்கு உத்தரவிடவேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்