SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி

2/27/2020 8:13:21 AM

திருப்பூர், பிப். 27:   திருப்பூர் விஜயாபுரம் அங்காளம்மன் நகரை சேர்ந்தவர் வீரக்குமார் (22). இவர் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஆண்கள் பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது நல்லூர் காசிபாளையம் பிரிவு அருகே காங்கயத்திலிருந்து வந்த தனியார் பஸ் பைக் பின்புறம் மோதியது. இதில் வீரக்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பஸ் சக்கரம் அவர் தலையில் ஏறி இறங்கிய இதில் வீரக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்