SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில் நிலையத்தில் துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பு

2/27/2020 8:12:59 AM

திருப்பூர், பிப். 27:   திருப்பூரில்  குடியுரிமை திருத்த சட்ட போராட்டம் எதிரொலியால் ரயில் நிலையத்தில்  துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  குடியுரிமை  திருத்த சட்டத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு  மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது. இந்த சட்டம்  இஸ்லாமியர்களுக்கு எதிரானது என கூறி பல்வேறு இடங்களில் மாணவர்கள், அரசியல்  கட்சியினர், இஸ்லாமியர் அமைப்பினர் உள்ளிட்டோர் பல்வேறு போராட்டங்களை  நடத்தி வருகின்றனர்.

அந்த போராட்டத்தின் போது டெல்லியில் இரு  தரப்பினருக்கிடையே ஏற்பட்ட வன்முறையால் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை  சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
இந்த சம்பவங்களை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ்  பெறக்கோரி இஸ்லாமியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி  வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசை பாதிக்கவேண்டும் என்பதற்காக அடிக்கடி  ரயில் நிலையம், தபால் நிலையம் போன்றவற்றில் போராட்டம் நடத்தி வரும்  நிலையில், திருப்பூர் ரயில் நிலைய பயணிகள் நடைபாதையில் துப்பாக்கி ஏந்திய  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு  போராட்டங்கள் ஓயும் வரை நீட்டிக்கப்படும் என ரயில் போலீசார்  தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Netaji_Subhash _Chandra_Bose_Airport In  Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்