SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமராஜர் சாலையில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்படுமா?

2/27/2020 8:00:17 AM

புதுச்சேரி, பிப். 27:    புதுவை காமராஜர் சாலையில் நீக்கப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 புதுவைக்கு  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 23ம்தேதி வருகை புரிந்தார்.  அவரது வருகையையொட்டி காமராஜர் சாலை, இசிஆர் உள்ளிட்ட இடங்களில் வேகத்தடைகள்  அகற்றப்பட்டன. அதன்பிறகு அந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனிடையே  குடியரசு துணைத் தலைவர் புதுவை வருகை தர உள்ளதாக கூறப்பட்டதால் இப்பணிகள்  எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன. இதன் காரணமாக அங்கு அடிக்கடி  விபத்துகள் நடந்தேறிய நிலையில் தற்காலிகமாக அங்கு பிளாஸ்டிக் தடுப்பு  பேரிகார்டுகள் போடப்பட்டன.

  இதன் மூலம் வாகனங்களின் அதிவேகத்துக்கு  மட்டுமே தடைபோட முடிந்த நிலையில் குறுக்கு சாலையை கடக்கும் வாகனங்கள்  அடிக்கடி விபத்துகள் நடந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது  குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடும் புதுச்சேரிக்கு வந்து சென்றுவிட்ட  நிலையில் உடனடியாக இந்த சாலைகளில் வேகத் தடைகளை அமைக்க வேண்டுமென  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிடில் பெரியளவில்  உயிரிழப்புகள் இந்த சாலைகள் நடைபெறும் அவலம் ஏற்படும் என எச்சரித்துள்ள  சமூக ஆர்வலர்கள், விரைவில் மக்களை திரட்டி போராடப்போவதாக  தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்