SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாசன வாய்க்கால்களை தூர்வார கோரி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

2/20/2020 6:47:11 AM

பெரம்பலூர், பிப்.20: ஏரிகளில் காணப்படும் வேலிக்கருவை, முள்செடிகளைஅகற்ற வும், ஏரிகள், பாசன வாய்க் கால்களைத் தூர்வார வலியுறுத்தி வரும் மார்ச் 19ம் தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பெரம்பலூரில் நடந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசா யிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம், பழைய பஸ்டாண்டு அருகே உள்ள தனியார் கூட்டரங்கில் நேற்று காலை நடைபெற் றது. சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் மேலப்புலியூர் பொன்னுசாமி, வேப்பந்தட்டை ஒன்றிய அமைப்பாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பருவமழைக்கு முன் தமிழகத்திலுள்ள ஏரிகளில் வேலிக்கருவை, முள் செடிகளைஅகற்ற வேண்டு ம், ஏரிகள், குளங்கள் மற்றும் பாசன வாய்க்கால்க ளைத் தூர்வார வலியுறுத்தி வரும் மார்ச் 19ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது. பெரம்பலூர் மா வட்டத்தில் சின்னமுட்லு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கல்லாற்றில் 5 இடங்களில் தடுப்பணைகட்ட வேண்டும். கொட்டரை நீர்த்தேக்கத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வே ண்டும்.விசுவக்குடி அணை க்கட்டை சீரமைக்க வேண் டும். பெரம்பலூர் மாவட்டத் தில் தனியாக தோட்டக்க லைத்துறை துணை இயக் குனர் பதவிஇடத்தை வி ரைந்து நிரப்ப வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி மக்காச்சோளம் ஏலம் நடத்தப்படும் தமிழ் நாடு ஒழுங்குமுறை விற் பனை கூடம் செயல்படாத தைக்கண்டிக்கிறோம், பெர ம்பலூர் மாவட்டத்தில் ஏற்க னவே தொடங்கப்பட்ட சின் னவெங்காய ஏல மையம், சேமிப்பு கிடங்கு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக்கும் மையம் ஆகியவை செயல் படாததையும், பெரம்பலூர் மாவட்டத்தில் மாநிலத்தி லேயே அதிக விளைச்சல் உள்ள பருத்தி, மக்காச்சோ ளம் சின்னவெங்காயம், ஆ கியவற்றைச் சாகுபடி செய் யும் விவசாயிகள் நலனில் மாவட்டநிர்வாகம் அக்கறை காட்டாததையும் கண்டிப் பது. வேளாண்மைத் துறை அதிகாரிகளின் செயல்பா டுகள் திருப்தி இல்லை என வலியுறுத்தி போராட்டம் நட த்துவது.

வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட விவசாயிக ளின் நகைகள் ஏலம் விடுவ தையும்,வங்கிகள் பயிர்க்க டன் கட்டக்கோரி நெருக்கடி கொடுப்பதையும் கண்டித் து போராட்டம் நடத்துவது எனத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் வேப்பந்தட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த பூலாம்பாடி கலியசாமி, அரும்பாவூர் சந்திரசேகர், பெரியம்மா பாளையம் பெரியசாமி, கடம்பூர் செல் வராஜூ, தொண்டப்பாடி செல்லப்பிள்ளை, பெரம் பலூர் ஒன்றியத்தைச் சேர் ந்த மேலப்புலியூர் செல்ல முத்து, சுப்பு, ஆலத்தூர் ஒன் றியத்தைச் சேர்ந்த பாடா லூர் கனகசாமி, திருவளக் குறிச்சி காமராஜ், வேலாயு தம்,வேப்பூர் ஒன்றியத்தை ச்சேர்ந்த சங்கர் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்ட னர். முடிவில் நாவலூர் கி ளைத் தலைவர் முத்துசாமி நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்