SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செங்குன்றம் அருகே சோகம் பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

2/20/2020 6:30:20 AM

புழல், பிப். 20: பொன்னேரி திருவேங்கடபுரம் மூவேந்தர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (58). அயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (38). இருவரும் நண்பர்கள்.  நெல் அறுவடை இயந்திரம் வைத்து வாடகைக்கு விடுபவர்கள்.
இந்நிலையில், இருவரும் நேற்று மதியம்  செங்குன்றம் பைபாஸ் சாலையில் உள்ள பழைய செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில்  பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பின்னால், வந்த கண்டெய்னர் மீது மோதியது.
இதில், பின் பக்கம் அமர்ந்து சென்ற சதீஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.  கண்டெய்னர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பிரபாகரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கண்ணன் (60). இவரது மனைவி வசந்தி (55). இருவரும் நேற்று மாலை கொரட்டூரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு  சென்றனர்.
மாலை 5 மணியளவில் ராஜமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட செந்தில் நகர் 400 அடி சாலையில் செல்லும்போது பின்னால் வந்த அரசு விரைவு பேருந்து இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி வசந்தி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். கணவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ஹரி, வழக்கு பதிந்து விரைவு பஸ் டிரைவர் ராமுலு (56) கைது செய்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்