SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியபாளையத்தில் டாஸ்மாக் கடை உடைத்து பணம் கொள்ளை

2/20/2020 6:30:07 AM

ஊத்துக்கோட்டை, பிப். 20:பெரியபாளையத்தில் டாஸ்மாக் கடையை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்றனர். பெரியபாளையம்-செங்காத்தாகுளம் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையின் மேற்பார்வையாளராக சீனிவாசன், விற்பனையாளர்களாக நடராஜன், துரை ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9 மணிவரை வசூலான பணம் ₹ 2.36 லட்சத்தை மேற்பார்வையாளர் சீனிவாசன் எடுத்து சென்றுவிட்டார். பின்னர், இரவு 9 மணியிலிருந்து கடை மூடும் நேரம் வரை ₹8,400க்கு மதுபானங்கள் விற்பனையானது. இப்பணத்தை கடைக்குள் உள்ள பதுங்கு குழிக்குள் உள்ள கஜானாவில் வைத்துவிட்டு 2 விற்பனையாளர்களும் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பினர்.இந்நிலையில், நேற்று டாஸ்மாக் கடை வழியாக சென்றவர்கள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பெரியபாளையம்  இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, எஸ்ஐ மனோஜ் பிரபாகர்தாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

 அங்கு மதுபானங்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. கஜானாவில் வைத்திருந்த ₹8,400  பணம் மட்டுமே கொள்ளை போனது தெரியவந்தது.டாஸ்மாக் கடைக்குள் உள்ள பதுங்கு குழிக்குள் உடைக்கப்பட்ட கஜானா பெட்டியை பார்வையிட்டு, கடை மேற்பார்வையாளர் மற்றும் 2 ஊழியர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். மேலும், அவர்களிடம் டாஸ்மாக் கடையில் சிசிடிவி காமிராக்கள் பொருத்த வேண்டும் என போலீசார் எச்சரித்தனர். இப்புகாரின்பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையில் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்