SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன்னார்குடியில் தேசம் காப்போம் பேரணி விளக்க பிரசார கூட்டம்

2/19/2020 1:56:57 AM

மன்னார்குடி, பிப்.19: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் வரும் 22 ம் தேதி நடைபெற உள்ள தேசம் காப்போம் பேரணி குறித்த பிரசார கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டமும் (சிஏஏ), என்.பி.ஆர், என்ஆர்சி நடவடிக்கைகளும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் தரப்பு மக்களு க்குமே ஆபத்தானவை. குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், 2020 ஏப்ரலில் துவங்கவுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும், தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தலைமையில் திருச்சியில் வரும் 22 ம் தேதி தேசம் காப்போம் பேரணி நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருச்சியில் நடைபெற உள்ள தேசம் காப்போம் பேரணி குறித்த பிரச்சார கூட்டம் மன்னை நகர ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை எதிரே நடைபெற்றது. திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் செங்குட்டுவன், ஜெயக்குமார், நகர செயலாளர் அறிவுக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேசம் காப்போம் பேரணியின் நோக்கங்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இளந்தென்றல் பேசினார். முன்னதாக தொகுதி துணை செயலாளர் ஆதவன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய துணைச்செயலாளர் சிகாமணி நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்