SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் பயணிகளை அச்சுறுத்தும் நிழற்குடை

2/19/2020 1:02:22 AM

பல்லாவரம், பிப்.19: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பஸ் நிறுத்த நிழற்குடை சிதிலமடைந்து ஆபத்தான முறையில் இருப்பதால், பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையின் இருபுறமும் பேருந்து நிறுத்தங்கள் அமைந்துள்ளன. பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளான  பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது  வியாபாரம், வேலை, மருத்துவம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு  தேவைகளுக்காக  இந்த நிறுத்தம் வந்து, பஸ் பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று  வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து சென்னை மார்க்கமாக இயக்கப்படும் மாநகர பேருந்துகளும், சென்னையில் இருந்து தாம்பரம் மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகளும் இந்த பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்கின்றன. தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.  

இங்கு, பயணிகளின் வசதிக்காக பல லட்சம் மதிப்பில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டன. நாளடைவில் இதனை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், தற்போது, சிதிலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, கிண்டி மார்க்கமாக செல்லும் சாலையில் அமைந்துள்ள நிழற்குடையின் மேற்கூரை முற்றிலும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ஓடுகள் உடைந்து, கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதால், எந்த நேரத்தில் ஓடுகள் உடைந்து தலையில் விழுமோ என்ற அச்சத்துடன் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சேதமடைந்து காணப்படும் பல்லாவரம் பேருந்து நிறுத்த மேற்கூரையை உடனடியாக சீரமைக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்