SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நரிக்குடி அருகே குடும்ப பிரச்சனையில் 4 மாதத்திற்கு முன் மாயமானவர் எலும்புக்கூடாக மீட்பு

2/18/2020 7:22:24 AM

திருச்சுழி, பிப்.18: நரிக்குடி அருகே குடும்ப பிரச்சனையால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் நேற்று கண்மாய் கரையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டார். நரிக்குடி அருகே உள்ள கத்தாளகுளத்தைச் சேர்ந்த ரெங்கசாமி (35) என்பவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக குடும்பத்தினருடன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு சென்று விட்டார். இது குறித்து முத்துமாரி அ.முக்குளம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிந்த போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் நரிக்குடி கண்மாய் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக ஆடு மேய்க்க சென்றவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் எலும்புக்கூடாக கிடந்த பிரேதத்தை முத்துமாரியிடம் காண்பித்தபோது, அது தன்னுடைய கணவர் தான் என உறுதி செய்தார். ரெங்கசாமியின் சடலத்திற்கு அருகே செடிகளுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலும் கிடந்தது. இது சம்பந்தமாக அ.முக்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்