SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2019ம் ஆண்டிற்கான தாசில்தார் பட்டியல் வெளியிட வலியுறுத்தல்

2/18/2020 6:58:49 AM

சிவகங்கை, பிப்.18: 2019ம் ஆண்டிற்கான தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் பட்டியல் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் நாகேந்திரமுருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வினோத்குமார் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் மெஹர்அலி முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் தர்மராஜ் தீர்மானங்களை முன்மொழிந்து சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீசன், நிர்வாகிகள் சங்கர், கமரூதீன், பாரதி, மருதுபாண்டி, ராமநாதன், பூங்கோதை, ரேவதி, சுந்தரமூர்த்தி, மலைச்சாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசாணை 133, அரசாணை 87ஐ அமல்படுத்தி 2004 முதல் திருத்திய துணை தாசில்தார் மற்றும் தாசில்தார் பட்டியலை பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிட வேண்டும்.

2018ம் ஆண்டு துணை தாசில்தார் பட்டியலில் காத்திருப்பில் உள்ளவர்களுக்கு காலியாக உள்ள இடங்களில் பணியிடம் வழங்க வேண்டும். ஓராண்டு நிறைவு பெற்ற தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்ய வேண்டும். தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் கூர்மை பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஒரே இடங்களில் பணிபுரியும் வருவாய் உதவியாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். 2019ம் ஆண்டிற்கான தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்