SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோட்டக்கலை அதிகாரிகள் பாராட்டு மத்திய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

2/18/2020 1:07:43 AM

தஞ்சை, பிப். 18: மத்திய பட்ஜெட்டை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் விடுதலை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சந்திரகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் மாலதி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் கணேசன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வங்கிகள், ஆயுள் காப்பீட்டு கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் தேசவிரோத நடவடிக்கையை கைவிட வேண்டும். புதிய வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தொழிற்சாலை மூடல்கள், அதன் விளைவாக ஏற்பட்ட வேலையிழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், நகர்ப்புற வளர்ச்சி திட்டம், சுகாதாரத்துறை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்காமல் அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கும்பகோணம்: கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சிபிஐஎம்எல் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் செந்தில்குமார், சிபிஐஎம்எல் மாவட்டகுழு உறுப்பினர் மாசிலாமணி தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் சின்னைபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.பாபநாசம்: பாபநாசம் தலைமை அஞ்சலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் காதர் உசேன், சிபிஐ ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு மனோகரன், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு தில்லைவனம் கண்டன உரையாற்றினர். சிபிஐ மாவட்ட குழு குணசேகரன், சாமு.தர்மராஜன், ஒன்றிய துணை செயலாளர் முருகானந்தம், சிபிஎம் மாவட்டக்குழு விஜயாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்