SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேக்கேஜ் சுற்றுலா கால் டாக்சிகளால் உள்ளூர் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

2/18/2020 12:52:08 AM

ஊட்டி,பிப்.18: பேக்கேஜ் முறையில் சுற்றுலா பயணிகளை கால் டாக்சிகள் சுற்றுலா தளங்களுக்கு அழைத்து ெசல்வதால் உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி சுற்றுலா கார், சுமோ, மேக்சி கேப் ஓட்டுநர் நலச் சங்க தலைவர் கோவர்த்தன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊட்டியில் சுற்றுலா பயணிகளை பெரிதும் நம்பியே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றோம். இந்நிலையில் ஊட்டி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓலா, உபர் போன்ற தனியார் கால் டாக்சிகள் பேக்கேஜ் என்ற முறையில் சுற்றுலா பயணிகளை சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்கின்றன.

தற்போது நாள்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்ட கால்டாக்சிகள் ஊட்டியில் சுற்றுலா பயணிகளை அழைத்து கொண்டு சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றன. இதனால் உள்ளூரில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போதிய வருவாயின்றி பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது அடிக்கடி உயர்ந்து வரும் எரிபொருள் விலை உயர்வு, வாகனங்களுக்கான காப்பீட்டு கட்டணம் போன்றவற்றால் கடன் வாங்கி வாகனங்கள் வாங்கியுள்ள நாங்கள், அதற்கான கட்டணத்தை கட்ட முடியாத நிலை நிலவி வருகிறது. வாகனங்களின் லோன் ெதாகையை கட்ட முடியாததால் பல வாகன கடன் நிதி நிறுவனங்கள் வாகனங்களை தூக்கி சென்று விட்டனர். எனவே உள்ளூர் வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில்  பேக்கேஜ் முறையில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் கால்டாக்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். சொந்த உபயோக வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Netaji_Subhash _Chandra_Bose_Airport In  Kolkata Got Damaged_In_Amphan_Cyclone

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்