SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளிகொண்டாவில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்

2/18/2020 12:16:41 AM

பள்ளிகொண்டா, பிப்.18: பள்ளிகொண்டாவில் காவல் நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையுறாக நிறுத்தபட்டுள்ள வாகனங்களால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விபத்துகள் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து சர்வீஸ் சாலையிலியே நிறுத்தி வைக்கின்றனர். இரண்டு வாகனங்கள் செல்ல கூடிய சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக செல்கிறது. இதனால் அடிக்கடி சர்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இதுதவிர சாலையிலியே அதிகளவில் மணல்கள் சேர்ந்துள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். எனவே, இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அரசு இடத்தை தேர்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதபடி நிறுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இங்கு பணிபுரியும் அதிகாரிகள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் உள்ளது. மேலும் புகார்களை கொடுக்க வரும் பொதுமக்களும் வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இடம் உள்ளது ஆனால் இந்த இடத்தில் நாள்தோறும் அடையாளம் தெரியாத நபர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். கேட்டால் காவல் துறையினரின் உறவினர்கள் என கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்