SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அச்சுறுத்தும் அரசு கட்டிடம் திருப்பாலைக்குடியில் தரைமட்டம் ஆக்கப்படுமா?

2/17/2020 6:46:05 AM

ஆர்.எஸ்.மங்கலம், பிப். 17: திருப்பாலைக்குடியில் உள்ள பழைய மருத்துவமனை கட்டிடத்தை இடித்து உடனே அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிலுள்ள திருப்பாலைக்குடியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மருத்துவமனையாக இயங்கி வந்த பழைய கட்டிடம் சேதமடைந்தது. இதனால் புதிய கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டு தற்போது புதிய கட்டிடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது. ஆனால் ஏற்கனவே மருத்துவமனையாக இயங்கி வந்த கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். அந்த கட்டிடம் இருக்க கூடிய பகுதி குழந்தைகளும்,பொதுமக்களும் அதிகமாக பயன்படுத்த கூடிய முக்கிய வீதியாகும். அதன் அருகில் அங்கன்வாடி மற்றும் பள்ளிக்கூடம், வங்கி உள்ளது.

தற்பொழுது இந்த கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து கீழே விழுந்து வருகின்றது கட்டிடத்தின் மேற்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகள் முளைத்து பெரிதாகி வருகின்றது. இதனால் மேலும் கட்டிடம் விரிசலடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இப்பகுதியை ராஜா கூறுகையில், இந்த பழைய மருத்துவமனை கட்டிடம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது இந்த பகுதியில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் ஓடி ஆடி விளையாடுகின்றனர் அருகிலேயே அங்கன்வாடி உள்ளது, பள்ளி மாணவ, மாணவிகள், வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் என தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் வழியில் இப்படி ஒரு கட்டிடம் இருப்பது மிகவும் அச்சமாகவே இருக்கின்றது.

எனவே ஏதேனும் விபரிதம் ஏற்படும் முன்னர் வரும் முன் காக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்