SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லூரி மாணவிகளுக்கு தனி பஸ் கோரி மனு

2/13/2020 6:18:28 AM

சிவகங்கை, பிப்.13: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மாணவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கையில் மன்னர் துரைச்சிங்கம் அரசுக்கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்களில் இருந்து அதிகப்படியான மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு வருகின்றனர். ஆனால் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இருக்கும் பஸ்களில் அதிகப்படியான நெரிசலுடன் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் நின்று வர வேண்டிய நிலை உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் வரும் பஸ்களை விட்டாலும் வேறு பஸ்கள் இல்லை. எனவே கல்லூரி வேலை நேரத்தை கணக்கில் கொண்டு மகளிர் பஸ்களும் மற்றும் கூடுதல் பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்