SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக 23 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற ஊழியர் கைது

2/13/2020 1:28:36 AM

சென்னை: மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக நாடகமாடி 23 லட்சம் மோசடி செய்த முன்னாள் மின் வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை சிந்தாதிரிப்ேபட்டை பகுதியை சேர்ந்த சரவணன் (28) என்பவர்  சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘‘மேட்டூரில் உள்ள மின் வாரியத்தில்  எனது தந்தை சண்முகம் பணியாற்றி வருகிறார். அவருடன் அதே மின் வாரியத்தில் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு ெபற்ற  சேலத்தை சேர்ந்த தேவராஜ் (60) என்பவர் எனது தந்தை சண்முகத்திற்கு பழக்கமானார். தேவராஜ் எனது தந்தையிடம் மின் வாரியத்தில் உயரதிகாரிகள் பலரை தெரியும் என்றும், இதனால் எனக்கு மின்வாரியத்தில் அதிகாரி வேலை வாங்கி  தருவதாகவும் கூறினார். அதற்காக 23 லட்சம் வரையில் பணம் செலவாகும் என்று கூறியிருந்தார். அதன்படி, நான் கடந்த 2014ம் ஆண்டு முதல் 23 லட்சத்தை சிறுக சிறுக தேவராஜிடம் கொடுத்தேன். ஆனால் அவர் சொன்னபடி  மின்வாரியத்தில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோதும் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.

எனவே வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தேவராஜ் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்’’ என புகாரில் கூறியிருந்தார்.இதுகுறித்து சிந்தாதிரிப்ேபட்டை போலீசார் மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்து முன்னாள் மின்வாரிய ஊழியர் தேவராஜை தேடி வந்தனர். இதற்கிடையே அண்ணாசாலை தங்கும் விடுதி ஒன்றில் தேவராஜ் தங்கி உள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ேநற்று முன்தினம் இரவு தனியார்  தங்கு விடுதிக்கு சென்று தேவராஜை கைது செய்தனர். இதேப்போல் பலரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளாரா? இதன் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்