SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.20.92 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

2/12/2020 12:51:26 AM

பொள்ளாச்சி. பிப்.12: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ரூ.20.92லட்சத்துக்கு கொப்பரை ஏலம்போனது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று  கொப்பரை ஏலம் நடந்தது. இந்த ஏலத்தின்போது, ஆனைமலை, கோட்டூர்,  அம்பராம்பாளையம், கோபாலபுரம், ஒடையக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை  சேர்ந்த 88 விவசாயிகள் 511 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். அவை முதல்  தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு, விற்பனை கூட கண்காணிப்பாளர் (பொ)  மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில், முதல் தரம் 269  மூட்டை கொப்பரை ஒரு கிலோ ரூ.100.60 முதல் அதிகபட்சமாக ரூ.105.25 வரையிலும்.  இரண்டாம் தரம் 242 மூட்டை கொப்பரை ஒரு கிலோ ரூ.50.60 முதல் ரூ.75வரையிலும்  என விவசாயிகள் கொண்டு வந்த, மொத்தம் 25.5டன் கொப்பரை ரூ.20.92லட்சத்துக்கு  ஏலம்போனது. இதை 10 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என, ஒழுங்குமுறை  விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

  • assam3

    தெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி!!!

  • 02-06-2020

    02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்