SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.21.36 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

1/29/2020 12:49:20 AM

பொள்ளாச்சி. ஜன.29:  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ரூ.21.36 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  நேற்று நடந்த  கொப்பரை ஏலத்தின்போது, ஆனைமலை மற்றும் கோட்டூர், ஒடையக்குளம், சேத்துமடை, அம்பராம்பாளையம்  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 88 விவசாயிகள் மொத்தம் 521 மூட்டை கொப்பரை கொண்டு வந்தனர்.  அவை முதல் தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு,  ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில், முதல் தரம் 278 மூட்டை கொப்பரை ஒரு கிலோ ரூ.98 முதல் அதிகபட்சமாக ரூ.104 வரையிலும். இரண்டாம் தரம் 243 மூட்டை கொப்பரை ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.77வரையிலும் என விவசாயிகள் கொண்டு வந்த மொத்தம் 26 டன் கொப்பரை ரூ.21.36 லட்சத்துக்கு ஏலம் போனது. இதை 10 வியாபாரிகள் கொள்முதல் செய்ததாக ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்