SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசனூர் அருகே ஹெத்தையம்மன் கோயில் திருவிழா

1/28/2020 1:25:48 AM

சத்தியமங்கலம், ஜன. 28:   ஆசனூர் அருகே கோட்டாடை பகுதியில் உள்ள ஒசட்டி கிராமத்தில் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் கோயில் திருவிழா நடந்தது.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த மாவள்ளம், கோட்டாடை, தேவர்நத்தம், ஓசட்டி,  உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கிராமத்தில் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், குலதெய்வமான ஹெத்தையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் விழா கொண்டாடுவது வழக்கம். இதன்படி ஒசட்டி கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோயிலில் கணபதி ஹோமம், பூச்சொரிதல், நவகலச பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. இதில் பங்கேற்ற படுகர் இன மக்கள் குடும்பத்துடன் பாரம்பரிய உடையணிந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  நேற்று இரவு கோயிலின் முன் தீ மூட்டி தங்களது பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தனர். விழாவில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் இருந்து படுகர் இன மக்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஹெத்தையம்மனுக்கு படையலிட்ட பொங்கலை பிரசாதமாக வழங்கினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்