SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியரசு தினவிழாவையொட்டி தர்மபுரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

1/24/2020 1:56:35 AM

தர்மபுரி, ஜன.24:  தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில், நாளை மறுநாள் (26ம் தேதி) காலை 8.05 மணிக்கு குடியரசு தின விழா நடக்கிறது. கலெக்டர் மலர்விழி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்கிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்படுகின்றனர். அரசு துறைகளின் சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 25 ஆண்டுகள் தண்டனையின்றி பணியாற்றிய போலீஸ் ஏட்டுகளுக்கு, முதல்வர் பதக்கம் அணிவிக்கப்படுகிறது. அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

குடியரசு தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானம், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் நேற்று மாலை முதல் கொண்டு வரப்பட்டது. மாவட்ட விளையாட்டு நுழைவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெட்டல் டிடேக்டர் கருவி மூலம் சோதனைக்கு பின்னரே வெளிநபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். விளையாட்டு வீரர்கள் மற்றும் நடைபயிற்சிக்கு வந்தவர்கள் இன்று முதல் செல்ல அனுமதி இல்லை. வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டது. பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் தொப்பூர் கணவாய், காரிமங்கலம் மஞ்சவாடி கணவாய், கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தினவிழா நடக்கும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சி நடக்கும் ஒருநாள் முன்புதான் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால், இப்போது 2 நாளைக்கு முன்னதாவே போலீஸ் பாதுகாப்பும், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. நாகர்கோயில் அருகே களியக்காவலை சோதனைச்சாடிவயில் போலீஸ் எஸ்ஐ தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி ஏதேனும அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்