SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதாரண்யத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

1/20/2020 1:09:04 AM

வேதாரண்யம், ஜன.20: வேதாரண்யத்தில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாளையொட்டி தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அலுவலகத்தில் எம்ஜிஆரின் படம் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எம்ஜிஆரின் படத்திற்கு ஒன்றியச் செயலாளர் கிரிதரன் நகரச் செயலாளர் எழிலரசு வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அறிவழகன், மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், திலிபன், வழக்கறிஞர்கள் நமச்சிவாயம், குமரவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் ஆறுகாட்டுத்துறையில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கினர். இதேபோல் குரவப்புலம் கடைத்தெருவில் ஒன்றிய அவைத்தலைவர் கலைச்செல்வன் தலைமையில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கத்தரிப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்னன் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் கலைமணி, அதிமுகவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thodar vanmurai20

    கலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு!

  • brezil20

    பிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்!

  • vimaanam20

    பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்