SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி

1/19/2020 6:08:19 AM

ஊட்டி, ஜன. 19: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது என அமைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்ட தி.மு.க. இளஞைர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் வரவேற்றார். தலைமை செற்குழு உறுப்பினர் முஸ்தபா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இளைஞர் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான கிரிக்கெட் குழுக்களை நேரில் சென்று சந்தித்து பங்குபெற செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மார்ச் 1ம் தேதி தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் “இளைஞர் எழுச்சி நாளாக” கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டும், மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் மாவட்டம் முழுவதும் கழக கொடியேற்று விழா நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம், தெருமுனை கூட்ட நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் நௌபுல், சேகரன், பாபு, நாகராஜ், உமாநாத், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நெளபுல் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்