SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

1/19/2020 5:56:26 AM

சத்தியமங்கலம், ஜன.19: சத்தியமங்கலத்தை அடுத்த விண்ணப்பள்ளியில் காந்தி கல்வி நிறுவனம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. மாணவ, மாணவிகள் தோரணம் அமைத்து கரும்பு மஞ்சள் படைத்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கியபோது ‘பொங்கலோ பொங்கல்’ என குரல் எழுப்பி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மாணவிகள் மாக்கோலம் போட்டு அசத்தினர். விழாவில் காந்தி கல்வி நிறுவன தலைவர் தமிழரசன், துணைத்தலைவர் அப்துல்ரகுமான், செயலாளர் சிராஜ்தீன்,  பொருளாளர் கோவிந்தராஜன், இயக்குனர்கள் அகமது இப்ராகிம், சுலைமான், சுப்பிரமணியன், கார்த்தி அரசு, காந்தி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பிரகதீஸ்வரன், காந்தி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தீனதயாளன், காந்தி கல்வியியல் கல்லூரி முதல்வர் பொறுப்பு தர்மாம்பாள், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் அவினாசிலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில், துறைத் தலைவர்கள் ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பல்வேறு பாரம்பரிய விளையாட்டு விளையாடி மகிழ்ந்தனர். கல்லூரி நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்