SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் குடகனாறு குடிநீர் பங்கீடு வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 100 கிராமமக்கள் மனு

1/14/2020 5:11:38 AM

திண்டுக்கல், ஜன. 14: குடிநீர் பங்கீடு குறித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி குடகனாறு பாசன படுக்கை மற்றும் குடிநீர் பயன்படுத்தும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில்,திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 110 கிலோமீட்டர் ஓடுகின்ற சிற்றாறு குடகனாறு மரபுவழியாக இயற்கை தனக்கென அமைத்து ஓடி வந்த பாதை தற்போது பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சிதிலமடைந்துள்ளது. பல முறை மனுக்கள் கொடுத்தும், போராடியும் கண்டுகொள்ளாத காரணத்தால் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி அனுமந்தராயன் கோட்டையை தலைமையாக கொண்டு 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கூடி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினோம். அதன் விளைவாக நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டல்படி பொதுப்பணித்துறை மக்களுக்கு சில ஒப்புதல்களை எழுத்துப்பூர்வமாக வழங்கியது. அதன்படி இரண்டு பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் அதாவது குடகனாற்று பகுதிக்கு 5 நாட்களுக்கும், நரசிங்கபுரம் மேல் வாய்க்கால் பகுதிக்கு 4 நாட்களும் தற்காலிகமாக நீர் விடுவது என முடிவு எடுக்கப்பட்டது அதை மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் நிறைவேற்றுவது எனவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி கடந்த ஜன.12 ம் தேதி குடகனாற்று ஆற்று பாசன படுகை விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஒன்றிணைந்து சுமார் 50 பேர் தங்களின் நீரை பெறுவதற்கு குடகனாறு தலைமை பகுதிக்கு சென்றோம். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முறையற்ற பேச்சு மற்றும் கண்டுகொள்ளாத தன்மையும் தொடர்ச்சியாகவே நிலவி வந்தது.இதையடுத்து நீரை திருப்பி விட்டு திரும்பி வரும்போது, மேல்பகுதி பாசன விவசாயிகள் வழியில் மூட்டைகளை போட்டு பாதையை மறித்தனர் மேலும் நரசிங்கபுரம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி குடகனாறு பாசன படுகை விவசாயிகளையும், இளைஞர்களையும், பெண்களையும் தாக்கினர். இந்த அசாதாரணமான சூழலுக்கு பொறுப்பற்ற ஆத்தூர் வருவாய்த்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் காரணம். எனவே மாவட்ட கலெக்டர் நேரடியாக தலையிட்டு ஒப்புதல் அளித்தபடி சுழற்சி முறையில் நீர் பங்கீட்டை வழங்க உறுதி அளிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-01-2020

  29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • coronaa_chinnnaa1

  ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

 • chinnaa_hospiitt1

  25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு

 • vinveli_sathanaiiii1

  விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை

 • landlide_floodd_11

  பிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்