SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்றும் அன்றும் கோரையாற்று பாலத்தின் உடைப்பு சீரமைப்பு புத்தாண்டில் நடைபெறவுள்ள 14, 15ல் தமிழ்நாடு கபடி பிரிமியர் லீக் போட்டிக்கான அணி வீரர்கள் தேர்வு

12/11/2019 7:09:19 AM

திருச்சி, டிச.11: புத்தாண்டில் நடைபெற உள்ள தமிழ்நாடு கபடி பிரிமியர் லீக் போட்டிக்கான அணிக்கான வீரர்கள் தேர்வு வரும் 14, 15 திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.தமிழ்நாடு சடுகுடு (கபடி) பிரிமியர் லீக் போட்டி குழுவின் தலைவர் பிராமிஸ் முத்துசாமி, திருச்சி நியூ கபடி சங்க செயலாளர் கஜராஜன் ஆகியோர் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடியை பிரபலமாக்கும் நோக்கிலும், அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் நோக்கிலும் தமிழ்நாடு சடுகுடு (கபடி) பிரிமியர் லீக் குழு சார்பில் வரும் ஆங்கில புத்தாண்டு (2020) பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் மாபெரும் கபடி லீக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 85 கிலோ ஆண்களுக்கு மட்டும் இப்போட்டி நடக்கிறது. இந்த லீக் கபடி போட்டிகளுக்காக அணி வீரர்கள் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் மூலம் கபடி வீரர்கள் முன்பதிவு நடந்து வருகிறது. டிச. 14, 15ம் தேதி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் உள்ள உள்விளையாட்டரங்கில் லீக் போட்டி அணிகளுக்கான வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் நேரிலும் வரலாம். தகுதியும், விருப்பமும் உள்ள வீரர்கள் ரூ.300 பதிவு கட்டணம் செலுத்தி தகுதித் தேர்வில் பங்கேற்கலாம்.

மாநில பிரிமியர் லீக் போட்டிக்கு ‘பொருக்கு தேர்வில்’ (செலக்சன் டிரையல்ஸ்) ஒரு அணிக்கு 15 பேர் வீதம் 120 பேர் தேர்வு செய்ய உள்ளோம். வீரர்கள் தேர்வு செய்து மொத்தம் 8 அணிகள் அமைக்கப்படுகிறது. அந்த அணிகளை தமிழகத்தில் உள்ள முக்கிய தொழிலதிபர்கள் ஸ்பான்சர் செய்வர். இந்த அணிக்கான செலவு முழுவதையும் அவர்கள் ஏற்றுக்கொள்வர்.லீக் போட்டிகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருப்பூர் ஆகிய 5 இடங்களில் 3 நாள் இன்டோர் மேட்ச்சாக நடக்கிறது. இரவு 7-10 மணி வரை நடக்கிறது. அணியின் உரிமையாளர்கள் முகாம் நடத்தி, அணி வீரர்களை அழைத்து வருவர். ஒரு நாளைக்கு நான்கு மேட்ச் நடக்கும். 15 நாட்கள் போட்டிகள் நடக்கிறது.

வீரர்களுக்கு மேன் ஆப்தி மேட்ச், சிறந்த ரைடர், சிறந்த கேட்சர் ஆகியவற்றுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும். சிறந்த சீரியஸ் வீரருக்கு சிறப்பு பரிசு உள்ளது பரிசுத்தொகை இன்னும் முடிவாகவில்லை. ஒவ்வொரு அணியின் உரிமையாளரும் தங்கள் அணிக்காக ரூ.15 லட்சம் செலவு செய்வர் என்றனர்.பேட்டியின்போது கோவை செயலாளர் சிங்காரவேலன், நிர்வாகிகள் ஹேமநாதன் பத்மநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
திருச்சியில் நடக்கிறது

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai20

  சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

 • modi20

  வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

 • hospital20

  ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

 • kaasi sivan20

  காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்