SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகள் வலியுறுத்தல் முத்துப்பேட்டை தர்கா நிர்வாகம் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு

12/10/2019 7:28:28 AM

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவின் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா உலகப் புகழ்பெற்ற ஒரு புண்ணியத்தலம். இங்கு நடைபெறும் வருடாந்திர பெரிய கந்தூரி விழா 14 நாட்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புனிதக் கொடி ஊர்வலத்துடன் 27.12.2019 அன்று கந்தூரி விழா துவங்க உள்ளது. இவ்விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். விழாவின் முக்கிய நாளான சந்தன கூடு வைபவத்தை முன்னிட்டு அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தாண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்ற தேதியை அரசுக்கு முன்கூட்டியே அறிவித்த நிலையிலும், தற்போது உள்ளாட்சி தேர்தல் கந்தூரி விழாவின் கொடியேற்ற நாளில் (27ம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் வாக்களிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே வேறு வழியின்றி தேர்தல் புறக்கணிப்பை அன்றைய தினம் செய்ய உள்ளோம். 27ம் தேதி தேர்தல் தேதியை மாற்றி அறிவித்தாலன்றி, எங்களது முடிவில் மாற்றம் செய்ய மாட்டோம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்