SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்டுகொள்ளப்படாத அவலம் குண்டும் குழியுமாய் கிராமச்சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி

12/9/2019 8:58:47 AM

சிவகங்கை, டிச.9:  சிவகங்கை மாவட்டம் முழுவதும் கிராமச்சாலைகள் கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத நிலையில் குண்டும், குழியுமாய் காணப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகள் உள்ளன. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதிகப்படியாக கிராமங்களை கொண்ட இம்மாவட்டத்தில் கிராமச்சாலைகள் கண்டுகொள்ளப்படாத நிலையில் உள்ளன. கிராமங்களில் உள்ள தெருக்களில் சிறிய அளவிலான சாலைகளை மட்டுமே ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்படும். பஸ் போக்குவரத்து உள்ள சாலைகள் அல்லது 500 மீக்கு மேல் நீளமுள்ள சாலைகள் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை, யூனியன் நிர்வாகம் சார்பில் அமைக்கப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள தெருக்களில் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டன. சிமெண்ட் சாலை போடப்பட்ட இடங்களில் சில மாதங்களிலேயே கற்கள் நீட்டிய நிலையில் வாகனங்களிலோ அல்லது நடந்து கூட செல்ல முடியாத நிலையில் சிதைந்துள்ளன. கிராமப்பகுதிகளுக்கு பஸ்கள் செல்லும் சாலைகளும் பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாத நிலையில் கடுமையாக சேதமடைந்துள்ளன.

சிவகங்கை அருகே சூரக்குளம் வழி நாட்டரசன்கோட்டை செல்லும் சாலை, அல்லூர்-பனங்காடி சாலை, காட்டுக்குடியிருப்பு சாலை, பில்லூர் சாலை, கண்டனிப்பட்டி-கருதுப்பட்டி சாலை, ஒக்கூர்-குளக்கட்டப்பட்டி சாலை, மேலமங்கலம் சாலை, சக்கந்தியில் இருந்து சேந்தி உடையநாதபுரம் செல்லும் சாலை உள்ளிட்டவை முழுமையாக சேதமடைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் இதுபோல் கிராமச்சாலைகள் கண்டுகொள்ளப்படாத நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக கிராமச்சாலைகள் புதிதாக அமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சிமெண்ட் சாலைகள் போடப்பட்ட இடங்கள் அனைத்தும் மிக மோசமாக சேதமடைந்து வாகனப்போக்குவரத்திற்கு தகுதியற்றதாய் உள்ளன. கிராமங்கள் வழியே பஸ் போக்குவரத்து இருந்த சாலைகளில் ஏராளமானவை சேதமடைந்ததால் பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலைகள் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. ஏற்கனவே உள்ள சாலைகளை குறைந்தபட்சம் பராமரிப்பு செய்யக்கூட நடவடிக்கை இல்லை. உடனடியாக புதிய சாலை போடவும், பராமரிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்