SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு இசைக்கருவி கண்காட்சி நாளை முதல் தொடக்கம்

12/9/2019 8:58:36 AM

சிவகங்கை, டிச. 9:  சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இசைக்கருவிகள் கண்காட்சி நாளை(டிச.10) தொடங்குகிறது. சிவகங்கை மாவட்ட இசைப்பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இசைக்கருவிகளின் கண்காட்சி நாளை தொடங்குகிறது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான பாரதியார் பாடல்கள் இசைப்போட்டி மற்றும் நடனப்போட்டி டிச.11ல் நடக்க உள்ளது. நாளை தொடங்கும் கண்காட்சியில் தமிழகத்தின் பாரம்பரிய காற்றுக்கருவிகளான நாதசுரம், புல்லாங்குழல், கிளார்னெட், ஹார்மோனியம், மரசுருதிப்பெட்டி, மவுத்ஆர்கன், தோல் கருவிகளான மிருதங்கம், தவில், தபேலா, கஞ்சிரா, தப்பு, உறுமி, உடுக்கை, கிடுகிட்டி, டோல், டோல்கி, நகரா, தவண்டை, மண் கருவிகளான கடம், ஜலதரங்கம், கடசிங்காரி கஞ்சக்கருவிகளான தேவார குழிதாளம், தவில் தாளம், நட்டுவாங்கத் தாளம், நரம்புக்கருவிகளான வீணை, வயலின், தம்புரா, கிடார், உக்லேலே, மேலும் தமிழ்நாட்டின் பழங்கால இசைக்கருவிகளான யாழ், யாழின் பரிணாம வளர்ச்சி மற்றும் அபூர்வ இசைக்கருவிகளின் புகைப்படங்களும், கண்காட்சியில் இடம் பெற உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இக்கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம். டிச.11 அன்று காலை பாரதியார் பாடல்கள் இசைப்போட்டி நடக்க உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் ஒருவர் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். நடனப் போட்டியில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இசைக்கலைஞர்கள், தங்களிடமுள்ள அரிய தோல்கருவிகள், நரம்புக்கருவிகளை இசைக்கண்காட்சியில் காட்சிப்படுத்த விரும்புவோரும் இசைப்பள்ளியை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவல் அறிய 04575-240021 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்