SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகை வாங்குவதுபோல் நடித்து 3 சவரன் வளையல் திருட்டு

12/7/2019 6:32:58 AM

சென்னை, டிச.7:  சைதாப்ேபட்டை ஜூனியர் சாலையில் சுனில் நிகார் (52) என்பவர் கவுதம் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 24ம் தேதி இரண்டு பெண்கள் வந்து, தங்களது குழந்தைக்கு வளையல் வேண்டும், என தெரிவித்துள்ளனர். இதனால், பல டிசைன்களில் வளையல்களை கடை ஊழியர்கள் காண்பித்துள்ளனர்.

அவற்றை பார்த்துவிட்டு, பிறகு வந்து வாங்குவதாக கூறி சென்றுவிட்டனர். இதற்கிடையே கடையில் உள்ள நகைகளை நேற்று முன்தினம் சுனில் நிகார் சரிபார்த்தபோது 3 சவரன் வளையல் மாயமாகி இருந்தது. உடனே கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது, கடந்த 24ம் தேதி வளையல் வாங்க வந்த 2 பெண்கள், சுனில் நிகாரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு 3 சவரன் வளையலை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவுகளுடன் அவர் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பெண்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

  • 21-01-2020

    21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்