SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 15 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம்

12/5/2019 5:00:34 AM

திருவண்ணாமலை, டிச.5: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 10ம் தேதி அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர தீபமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் செய்யும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறியதாவது: தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பஸ், மினி வேன் போன்ற வாகனங்கள் நிறுத்த 15 தற்காலிக பஸ் நிலையங்களும், 24 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வகையில் 90 இடங்களில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இலவச பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. ஹவுரா எக்ஸ்பிரஸ் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கட்டளைதாரர், உபயதாரர் அனுமதி சீட்டு பெற்றவர்களில் கோயிலில் இடவசதியை பொறுத்து பரணி தீபம் தரிசனத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களும், மகா தீபம் தரிசனத்திற்கு 6 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதேபோல், பொது தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் பரணி தீபத்திற்கு 2 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்திற்கு 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்குள் அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து எஸ்பி சிபிசக்கரவர்த்தி கூறுகையில், `பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கார் பார்க்கிங் வசதி 48 மணி நேரத்திற்கு முன்பு இணையதளம் திறக்கப்படும். இந்த ஆண்டு 1000 கார்கள் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார். ஆய்வின் போது, டிஆர்ஓ ரத்தினசாமி, ஏடிஎஸ்பி அசோக்குமார், திட்ட இயக்குநர் ஜெயசுதா, ஆர்டிஓ தேவி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அரவிந்த், நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்