SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடக்கவே லாயக்கற்ற நிலையில் சகதிக்காடாக மாறிய சாலை

12/3/2019 5:55:55 AM

மதுரை, டிச.3:  மதுரை உத்தங்குடி பகுதியில் அய்யணன் நகருக்கு சாலை போடாமல், மண்ணைக் கொட்டி வைத்ததில் மழையால் சேறும் சகதியாகி, நடக்கவே லாயக்கற்றதாக மாறிப்போனதை கண்டித்து, சாலை வசதி கோரி இப்பகுதி மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால், அரை மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. மதுரை மேலூர் மெயின்ரோட்டில் உள்ளது உத்தங்குடி. இங்கிருந்து பாண்டி கோயிலுக்கு செல்லும் சாலை உள்ளது. சாலை முறையாக போடாமல் பல ஆண்டுகளாக போக்குவரத்திற்கே லாயக்கற்ற நிலையில் இது இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, மாநகராட்சியினர் இங்குள்ள அய்யணன் நகர் பகுதி ரோட்டில் கிணறு தோண்டிய மண்ணைக் கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால், இப்பகுதி சேறும், சகதியுமாக மாறி விட்டது. இந்த சாலையில்தான் சுடுகாடு இருக்கிறது. சாலையில் உடலை எடுத்து ஊர்வலமாக கொண்டு செல்ல முடியவில்லை. குடியிருப்பு பகுதிகளும் இருக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் இந்த சாலையில் நடக்க முடியவில்லை.

வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலையில் இந்த சாலை இருப்பதுடன், அடிக்கடி விபத்துகளாலும், வழுக்கி விழுந்தும் பலரும் காயமடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேற்று திரண்டனர். இவர்கள், அய்யணன் நகரில் இருந்து ஊர்வலமாக வந்து, மதுரை - மேலூர் ரோட்டில் உத்தங்குடியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த மெயின்ரோட்டில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், பாதாளச்சாக்கடை பணிக்காக சாலை பணி செய்யாமல் போட்டு வைத்திருப்பதாகவும், விரைவில் சீரமைப்பதாகவும் உறுதியளித்தனர். எனினும் பெண்கள் உள்ளிட்டோர் அவரை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு புதூர் போலீசார் வந்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. ஓரிரு நாட்களில் மாநகராட்சி சார்பில் சாலையை சரி செய்து தருவதாகவும், முறைப்படி விரைந்து நல்ல சாலை அமைத்துத்தருவதாகவும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்