SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பால் பண்ணை தொழில் நுட்ப விளக்க பயிற்சி

12/3/2019 5:50:32 AM

மேச்சேரி,  டிச.3:  மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ்,  பால் பண்ணையில் கையாள வேண்டிய தொழில்நுட்பம் விளக்க பயிற்சி முகாம்  நடைபெற்றது.முகாமில மேச்சேரி வேளாண்மை அலுவலர் பாலுமகேந்திரன் கலந்து  கொண்டு, உபரி வருமானம் பெற கறவை மாடு வளர்ப்பு, ஆடு மற்றும் கோழி, மீன்  வளர்ப்பு போன்ற ஒருங்கிணைந்த பண்ணை தொழில் செய்யும் வழிமுறைகள் குறித்து  விளக்கி பேசினார்.  மேச்சேரி முதன்மை கால்நடை மருத்துவர் சின்னமாரியப்பன்,  தொழில்நுட்பம் குறித்து விளக்கி பேசினார். அப்போது, அவர் கறவை மாடுகளை  எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கினார்.  இப்பயிற்சியில் பசுந்தீவனம், கலப்பு தீவனம் பயன்பாடு, மடிநோய் வராமலிருக்க  கையாள வேண்டிய முறைகள், சுகாதாரமான பால் உற்பத்தி மற்றும் நோய் பராமரிப்பு  குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்