SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் அருகே பரிதாபம் ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி தந்தை, மகள் சாவு டிரைவர்அதிரடி கைது

12/3/2019 5:50:17 AM

சேலம், டிச.3: சேலம் அருகே நேற்று காலை ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதியதில் தந்தை, மகள் உயிரிழந்தனர். சேலம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை தனது மனைவி சுசீலா மற்றும் மகள் கனகா (36) ஆகியோரை தனது ஆட்டோவில் அழைத்துக் கொண்டு ஓமலூரில் நடக்கும் அண்ணன் மகன் திருமணத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அரபி கல்லூரி அருகே சென்றபோது கரூரில் இருந்து மேட்டூர் நோக்கி சென்ற டேங்கர் லாரி இவர்களது ஆட்டோவின் பின்னால் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில், கனகா தவறி ரோட்டில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த டேங்கர் லாரியின் சக்கரம் கனகா மீது ஏறியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கனகா உயிரிழந்தார்.

மேலும் ஆட்டோவில் இருந்த பழனிசாமி, சுசீலாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த பழனிசாமி, சுசீலாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமியும் உயிரிழந்தார். தாய் சுசீலாவுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த கருப்பூர் போலீசார் கனகாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் டேங்கர் லாரி டிரைவரான திருமாவளவனை(40) கைது செய்தனர். இறந்த கனகாவிற்கு செந்தில்குமார் என்ற கணவரும், 13, 8 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்