SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 11 மாதத்தில் 17 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

12/3/2019 4:05:24 AM

கோவை, டிச. 3:  கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இது வரை 17 ஆயிரத்து 166 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இதற்காக ரூ.26 லட்சத்து 87 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது .
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளதாவது:உணவுப்பொருட்களை மடிக்க பயன்படுத்தும் பாலிதீன் அல்லது பிளாஸ்டிக் தாள், தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் காகித குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் விரிப்புகள்,  போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.     மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், சிறு வியாபாரிகள் மருத்துவமனைகள், துணிக்கடைகள், திருமண மண்டபங்களில்  ஆய்வுகள் மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இது வரை 17 ஆயிரத்து 166 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இதற்காக ரூ.26 லட்சத்து 87 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 3 ஆயிரத்து 686 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 லட்சத்து 12 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 1ம் தேதி முதல் 2ம் தேதி வரை ஆகிய இரண்டு நாட்களில் 2 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்