SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய பிரபல வங்கி கொள்ளையன் ஜார்கண்டில் சுற்றிவளைப்பு: 9 மாதங்களுக்கு பின் சிக்கினார்

12/3/2019 12:08:12 AM

சென்னை: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய பிரபல வங்கி மோசடி கொள்ளையனை, 9 மாதங்களுக்கு பிறகு ஜார்கண்ட் மாநிலத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.வங்கி வாடிக்கையாளர்களை செல்போனில் தொடர்புகொண்டு, வங்கி அதிகாரி எனக்கூறி, ‘‘உங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும். எனவே, உங்கள் ஏடிஎம் கார்டின் ரகசிய எண் மற்றும் 16 இலக்கம் கொண்ட எண்ணை கூறுங்கள்,’’ என நூதன முறையில் பேசி, வடமாநில கொள்ளையர்கள் நாடு முழுவதும் கைவரிசை காட்டி வருகின்றனர். இதேபோல், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் மண்டல் (22), ஜூகேந்தர் குமார் மண்டல் (23), பாஸ்கர் குமார் (25) ஆகியோர் மீது கொல்கத்தா சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு ெசய்து தேடி வந்தனர்.அப்போது, இந்த 3 பேரும் சென்னையில் தங்கி இருப்பதாக கொல்கத்தா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து கொல்கத்தா சைபர் க்ரைம் போலீசார் கடந்த பிப்ரவரி 9ம் தேதி சென்னை வந்தனர். பின்னர், சென்னை மாநகர போலீசார் உதவியுடன் வங்கி கொள்ளையர்களின் செல்போன் சிக்னல் உதவியுடன், சேப்பாக்கத்தில் உள்ள பிரபல ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.

பின்னர், கொல்கத்தா சைபர் க்ரைம் போலீசார் திருவல்லிக்கேணி போலீசார் உதவியுடன் அதிரடியாக ஓட்டலுக்குள் புகுந்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் மண்டல் (22), ஜூகேந்தர் குமார் மண்டல் (23), பாஸ்கர் குமார் (25) ஆகிய 3 கொள்ளையர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹25 லட்சம் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியான பாஸ்கர் குமார் (25) என்பவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த திருவல்லிக்கேணி போலீசார் தப்பி ஓடிய பாஸ்கர் குமாரை தீவிரமாக தேடி வந்தனர்.
ஆனால், 9 மாதங்களாகியும் அவரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் தேவி மாவட்டம் பிஎஸ்.மோகன்பூர் பகுதியில் பாஸ்கர் குமார் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீசார் அங்கு சென்று, அவரை சுற்றிவளைத்து கைது ெசய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்