தரைப்பால நீரில் மூழ்கி தொழிலாளி பலி நெடுஞ்சாலைத்துறை 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு
12/3/2019 12:08:05 AM
சென்னை: அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை, நேரு நகர் மெயின் ரோட்டை சேர்ந்த கூலி தொழிலாளி ஷேக் அலி (49), கடந்த 30ம் தேதி மாலை, வேலை முடிந்து, மண்ணூர்பேட்டை சி.டி.எச். சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தொடர்மழை காரணமாக அங்கிருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கி இருந்தது. இதனை கவனிக்காத ஷேக் அலி தரைப்பால பள்ளத்தில் தவறி விழுந்தார். அவரை பாதசாரிகள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் நீரில் மூழ்கினார். இதனையடுத்து தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரம் போராடி உயிரிழந்த நிலையில் ஷேக் அலி உடலை மீட்டனர்.
அப்போது, மழைநீர் கால்வாய் அமைக்காத நெடுஞ்சாலை துறையே இந்த இறப்புக்கு காரணம் என்று கூறி, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த செய்தி ‘தினகரன்’ நாளிதழில் படத்துடன் வெளியானது. இதனை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி நிரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்காக எடுத்து விசாரித்தார். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையில் கட்டிய கோயில் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
அரசு அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து பெண் கோட்டாட்சியருக்கு மிரட்டல் அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு: கிண்டியில் பரபரப்பு
குழந்தை பிறக்க சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சித்த மருத்துவர் கைது: போலீசார் விசாரணை
மாநகராட்சி பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய குழு: புகாரை தொடர்ந்து ஆணையர் அதிரடி
பாலியல் தொல்லை ஆசாமிக்கு தர்மஅடி
துணிக்கடையில் 9 லட்சம் கொள்ளை
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது