மாவட்டத்தில் சர்க்கரை அட்டை தாரர்கள் அரிசி அட்டைகளாக மாற்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
11/22/2019 1:21:29 AM
திண்டுக்கல், நவ. 22: மாவட்டத்தில் சர்க்கரை குடும்ப அட்டையிலிருந்து அரிசி அட்டைகளாக மாற்ற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் 19.11.2019 அன்று சர்க்கரை குடும்ப அட்டைகளை, அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்திடும்படி உத்திரவிடப்பட்டுள்ளார்.
அதன்படி, சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை 26.11.2019க்குள் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள 6,30,981 மின்னணு அட்டைகளில், 19,861 அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளன.
எனவே, விருப்பம் உள்ளவர்கள் 26.11.2019க்குள் சர்க்கரை பெறும் குடும்ப அட்டையிலிருந்து அரிசி பெறும் குடும்ப அட்டையாக மாற்றம் செய்யக் கோரி இணையதளம் மூலமாகவோ, நேரடியாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கேங் மேன் உடல்தகுதி தேர்வு மழையால் தள்ளிவைப்பு
நீட் தேர்வு விண்ணப்பங்களை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் மாணவர்கள் கோரிக்கை
ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியில் குழித்தட்டு நாற்றங்கால் செயல்விளக்க முகாம்
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கியது
ஒட்டன்சத்திரம் அருகே சாலை பணி பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி
நிலக்கோட்டை மகளிர் கல்லூரியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி