SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பின்னத்தூர் கிழக்குகடற்கரை சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும்

11/20/2019 7:34:37 AM

முத்துப்பேட்டை, நவ.20:திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் கிழக்குகடற்கரை சாலை பெட்ரோல் பங்க் எதிரே தோலி சாலை பிரியும் இடத்தில் பின்னத்தூர் மற்றும் தோலி ஊராட்சிக்குடப்பட்ட கிராமங்கள் பயன் படும் வகையில் பேருந்து நிறுத்தம் கட்டிடம் நீண்ட பல ஆண்டுகளாக இருந்து வந்தது. சுமார்10வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்க சாலையில் விரிவாக்கத்திற்கு இங்கு இருந்த பேருந்து நிறுத்தம் கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆனால் இந்த சாலையை அமைத்த நிர்வாகம் இதுநாள்வரை அப்பகுதியில் அதற்கு பதில் கட்டிடம் கட்டிதரப்படாததால் அங்கு பேரூந்து நிறுத்தம் இல்லாமேலே உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அணைத்து அதிகாரிகள் மட்டத்திலும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனுமில்லை. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று திருவாரூர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருவாரூர்மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ள திருத்துறைப்பூண்டி வழி முத்துப்பேட்டை சாலையில் உள்ள பின்னத்தூர்ஊராட்சி தெற்கு பின்னத்தூர்குக்கிராமம் செல்லும் (பெட்ரோல் பங்கு) எல்லை வாய்க்கால் அருகே தோலி ரோடு என்ற பேருந்து நிறுத்தம் நிழற்குடையுடன் பல ஆண்டுகாலமாக செயல்பட்டுவந்தது.மேற்படி பேருந்து நிறுத்தத்தை பின்னத்தூர் மற்றும் தோலி ஆகிய இரண்டு பஞ்சாயத்தை சேர்ந்த பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இப்பேருந்து நிறுத்தம் கிழக்கு கடற்கரை சாலை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டு பேருந்து நிறுத்தமும் நீக்கப்பட்டு கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதி மக்கள் குடியிருப்பிலிருந்து சுமார்5கிமீதொலைவில் உள்ள உதயமார்தாண்டபுரம் ஊராட்சி பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல வேண்டியுள்ளதால் அன்றாடம் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.இது தொடர்பாக செறுபனையுர்கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கணபதி ஏற்கனவே பலமுறை மனு அளித்துள்ளார். எங்களின் கோரிக்கை நிறைவேற்றி தர மறுக்கும்பட்சத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட இடத்தில் பேருந்து நிழற்குடை அமைத்து தர தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் கிராம மக்கள் கையெழுத்து போட்டு வழங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

 • rp23

  நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

 • thai_ammamam

  தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

 • mouni_amavaaa1

  வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்