SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருட்டு காரில் வந்து விபத்து ஏற்படுத்திய வாலிபர் சுற்றி வளைப்பு

11/20/2019 7:28:07 AM

ஆரல்வாய்மொழி, நவ.20: ஆரல்வாய்மொழியில், குற்றாலத்தில் காரை திருடி விட்டு வேகமாக வந்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரை ரோந்து போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி சிவன்கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் கணேசமூர்த்தி(28). இவர் தென்காசியில்  டிராவல்ஸ் நடத்தி வரும் சாந்தினி என்பவருக்கு சொந்தமான சொகுசுகார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.  கடந்த இரு நாட்களாக தூத்துக்குடி கீழ அலங்கார தட்டு பகுதியை சேர்ந்த ஜெயமாரி என்பவர் மகன் ஜூலியன், இந்த டிராவல்சில் இருந்து சொகுசு காரை வாடகைக்கு எடுத்தார். இக்காரை கணேசமூர்த்தி ஓட்டினார். நேற்று காலை குற்றாலம் ஐந்தருவி அருகே உள்ள காட்டேஜ் காம்பவுண்டுக்குள் காரை நிறுத்தி விட்டு, டிரைவர் கணேசமூர்த்தி  பாத்ரூமுக்கு சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்த்த போது காரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் காரையும் காரில் இருந்தவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கார் திருடப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த அவர் டிராவல்ஸ் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தார். பின்னர் இது பற்றி குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் பற்றி அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

இத்தகவல் ஆரல்வாய்மொழி சோதனை சாவடி மற்றும் ரோந்து போலீசாருக்கும் கிடைத்தது. இந்நிலையில் காவல்கிணறு - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் சோதனை சாவடிக்கு முன்பாக அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும், ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தை சேர்ந்த  சூர்யா நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காவல்கிணற்றில் இருந்து அதிவேகமாக வந்த சொகுசு கார் அவர் மீது  மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனை பார்த்த பொதுமக்கள் சத்தம் போடவும், சிலர் இரு சக்கர வாகனத்தில் காரினை துரத்தினர். ஆனால் அந்த கார் சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே சோதனை சாவடி போலீசார் ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உஷார் நிலையில் இருந்த ரோந்து போலீசார் தப்பிச்செல்ல முயன்ற காரை சுற்றி வளைத்து ஓட்டுனரை பிடித்தனர். அப்போது அவர் அதிக போதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் அக்கார் குற்றாலத்தில் காணாமல் போன கார் என தெரிய வந்தது. உடனே காரையும் அவரையும் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இது பற்றி ஆரல்வாய்மொழி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் காரை ஓட்டி வந்தவர் ஜூலியன் என தெரிய வந்தது.மேலும் அவருக்கு வேறு கார் திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggg20

  ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

 • QuarantineWuhan24

  சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

 • rp23

  நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

 • thai_ammamam

  தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

 • mouni_amavaaa1

  வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்