உள்ளாட்சி தேர்தல் பணிகளை செயல்படுத்த இந்திய கம்யூனிஸ்ட் உயர்நிலை தேர்தல் பணிக்குழு அமைப்பு
11/19/2019 7:32:09 AM
தஞ்சை, நவ. 19: தஞ்சையில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் காசிநாதன் தலைமை வகித்தார். உள்ளாட்சி தேர்தல் பணிகள், மாநில நிர்வாகக்குழு முடிவு மற்றும் தற்போதைய அரசியல் நிலைகளை விளக்கி தேசியக்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பாரதி பேசினார். தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர், மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி தலைவர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு போட்டியிடக்கூடிய வாய்ப்புள்ள இடங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் இடங்களை இறுதி செய்வதென முடிவு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட உயர்நிலை தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் மாவட்ட உயர்நிலை தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. கூட்டத்தில் உள்ளாட்சி தோ்தலில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் வாக்குச்சாவடி முகவர் நியமனம் உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறைவு செய்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 100 சதவீதம் வெற்றி பெற பணியாற்றுவது. கடந்த 7ம் தேதி முதல் துவங்கி நடந்து வரும் கட்சி உறுப்பினர் பதிவு இயக்கத்தில் மகளிர் மற்றும் இளைஞா–்களை அதிக அளவில் உறுப்பினா–்களாக சோ்த்து கட்சி தொடங்கிய தினமான டிசம்பர் 26ல் பதிவு இயக்கத்தை நிறைவு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் நியமனம்
2 மாதமாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு
பொதுமக்கள் முடிவு அரசு பேருந்தை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் போராட்டம்
உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 4வது நாளில் 843 பேர் வேட்புமனு தாக்கல்
பேராவூரணி மெயின் சாலை குண்டும், குழியுமாக மாறிய அவலம்
வாகன ஓட்டிகள் அவதி பாபநாசத்தி்ல் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது