SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?

11/19/2019 7:28:27 AM

மன்னார்குடி, நவ. 19:திருமக்கோட்டையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கிராமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமக்கோட்டை ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மகாராஜபுரம், பெருமாள் கோவில்நத்தம், கருப்பாயி தோப்பு, திருமேனி ஏரி ஆகியவை முக்கிய கிராமங்களாக உள்ளன. திருமக்கோட்டையில் மட்டும் 10மேற்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. திருமக்கோட்டையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமற்ற உப்பு கலந்த நீராக உள்ளது. இந்த நீரை குடிப்பதினால் இப்பகுதி யில் வசிக்கும் 30 சதவீதத்தினருக்கு சிறுநீரக கற்களும், கிட்னி பிரச்சினையும் உள்ளது. இத்தண்ணீரை காய்ச்சும் போது அடியில் வெள்ளை நிறமாக சுண்ணாம்பு போல 1 லிட்டர் நீருக்கு கால் லிட்டர் அளவிற்கு உப்பு சுண்ணாம்பு போல நீருக்கடியிலும் படிந்துவிடுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை. இதே குடிநீரைத்தான் திருமக்கோட்டையில் பல்வேறு பள்ளிகளில் கல்வி பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் குடித்து வருகின்றனர். இது உயிர்பிரச்னை என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏதெனும் ஒரு குடிநீர் தொட்டியிலாவது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மக்களின் உயிரை காப்பாற்ற கிராம பொதுமக்களும், வர்த்தக சங்கத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மகாராஜபுரம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி கூறுகையில், சுகாதாரமற்ற குடிநீரால் கிராம மக்கள் எராளமான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். நிலத்தடி நீர் அதால பாதாளத்திற்கு சென்றதன் விளைவு கடல்நீர் உட்புகுந்ததால் குடிநீரின் தன்மை மாறிவிட்டது. எங்கள் ஊராட்சியில் சுகாதார மற்ற குடிநீரை குடிப்பதினால் ஏரளாமானோர் சிறுநீரகத்தில் கல் உருவாவது, கிட்னி பிரச்னை உள்ளிட்ட பல் வேறு உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை எடுத்து சென்றும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி மக்கள் சுகாதாரத்தில் அக்கறை கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தேவைப்பட்ட இடங்களில் அமைத்து பாதுகாப்பான சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்