வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள்
11/19/2019 7:11:00 AM
ஓமலூர், நவ.19: தாரமங்கலம் அருகேயுள்ள அமரகுந்தியில், வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு, நேரு யுவகேந்திரா சார்பில் கோப்பைகள் வழங்கப்பட்டது. தாரமங்கலம் ஒன்றியம் அமரகுந்தி கிராமத்தில், அமரகுந்தி காந்தி இளைஞர் நற்பணி மன்றம், சேலம் நேரு யுவகேந்திரா இணைந்து, வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தியது. இதில், கால்பந்து, கைப்பந்து, இறகுபந்து, தடகளம், கோ-கோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் தாரமங்கலம் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 35 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் அமரகுந்தி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றன. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், தனித்தன்மையுடன் திறமைகளை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளுக்கு, தனிநபர் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கான பரிசளிப்பு விழாவில், சேலம் மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ட்ரவீன் சார்லஸ்டன் கலந்துகொண்டு வீரர்களுக்கும் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். காந்தி நற்பணி மன்ற தலைவர் கார்த்திக், துணை தலைவர் சபரிராஜா, செயலாளர் விமல்குமார், அருண்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
மேலும் செய்திகள்
சேலத்தில் வரும் 6, 7ம் தேதி இலவச நீரிழிவு, கால் நரம்பு பரிசோதனை முகாம்
தற்கொலை கடிதம் வைத்து விட்டு மாயமான தம்பதி
பனமரத்துப்பட்டி விவசாயிகள் காய்கறி விதைகள் மானிய விலையில் பெற அழைப்பு
ஊரக உள்ளாட்சி தேர்லையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்
திருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை
இடைப்பாடி புதன்சந்தையில் ₹40 லட்சத்துக்கு வர்த்தகம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி