கந்திகுப்பம் காலபைரவர் கோயிலில் கால பைரவாஷ்டமி பெருவிழா
11/19/2019 7:00:42 AM
கிருஷ்ணகிரி, நவ.19: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தில் உள்ள கால பைரவர் கோயிலில், 12ம் ஆண்டு கால பைரவாஷ்டமி பெருவிழா, கடந்த 11ம் தேதி முதல் விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவில், 63 நாயன்மார்களுக்கு கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. தினந்தோறும் மாலை 6 மணிக்கு சொற்பொழிவு, நாடகம், பரத நாட்டியம் நடைபெற்று வருகிறது. இது குறித்து தவத்திரு பைரவ நாதசுவாமிகள் கூறியதாவது:
12ம் ஆண்டு காலபைரவாஷ்டமியை முன்னிட்டு இன்று (19ம் தேதி) காலை 6 மணி முதல் காலபைரவருக்கு மாலை அணிவித்து, பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். பின்னர், மாலை 6 மணிக்கு தேர் ஊர்வலம் செங்கொடி நகர், சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கந்திகுப்பம் சென்று கோயிலை அடைகிறது. விழாவினை முன்னிட்டு கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, நாதஸ்வரம், தாரை தப்பட்டை, வாணவேடிக்கையுடன் தேர் பவனி நடைபெற உள்ளது. காலபைரவாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதி, கோயிலின் சார்பில் கந்திகுப்பத்தில் இருந்து இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரம் அன்னதானம் வழங்கப்படுகிறது. வருகிற 21ம் தேதி விழா நிறைவு பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
காரிமங்கலம் அருகே கிராமப்புற மின்வாரிய அலுவலகம் அமைக்காததால் மக்கள் அவதி
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
அறிவியல் கண்காட்சியில் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சாதனை
தென்பெண்ணையாற்றில் பெண் சடலம் மீட்பு
விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண்மை கருவிகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி