மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நெற்பயிர்களை தாக்கும் செவட்டை நோய் விவசாயிகள் கவலை
11/19/2019 6:27:47 AM
வாடிப்பட்டி, நவ. 19: வாடிப்பட்டி பகுதியில் நெற்பயிர்களை வேகமாக தாக்கி வரும் செவட்டை நோயினை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாடிப்பட்டி பகுதியில் பேரனை முதல் கள்ளந்திரி வரை சுமார் 45ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முல்லை பெரியாறு பாசன கால்வாய் தண்ணீர் மூலம் இருபோக நெல்சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் இப்பகுதி விவசாயிகள் முதல்போக நெல் சாகுபடி பணிகளை முழுவீச்சில் துவங்கினர். இப்பகுதி விவசாயிகள் அதிகளவில் ஏ.டி.டி.37, ஐ.ஆர்.16, உமா, ஜோதி ஆகிய விதை நெற்கள் மூலம் தயாரான நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். இவை 100 நாட்களிலிருந்து 120 நாட்களில் விளையும் தன்மை உடையது. தற்போது நெற் பயிர்கள் பால்பிடிக்கும் பருவத்திற்கு வர வங்கியுள்ளன.
இந்நிலையில் இப்பகுதி நெற்பயிர்களில் செவட்டைநோய் தாக்குதல் அதிகளவில் பரவி வருகிறது. இம்மாதிரியான நோய் தாக்குதலுக்குள்ளாகும் நெற்பயிர்கள் சரியாக பால் பிடிக்காமல் கதிர் சிகப்பு நிறத்தில் மாறி பின்னர் காய்ந்து விளைச்சலில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என இப்பகுதி விவசாயிகள் புலம்பி வருகின்றனர். எனவே வாடிப்பட்டி வேளாண்மை துறை அதிகாரிகள் விளைநிலங்களை நேரில் பார்வையிட்டு உரிய ஆலோசனைகளை வழங்கி நெற்பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
செக்கானூரணியில் டிச.7ல் மின்தடை
திருமங்கலத்தில் 33 பதட்டமான வாக்குசாவடிகள்
திருமங்கலம் ஒன்றியத்தில் அதிகளவில் பெண் கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு
உள்ளாட்சி தேர்தலையொட்டி திருமங்கலம் ஒன்றியத்தில் 169 வாக்குசாவடி மையங்கள்
உள்ளாட்சித் தேர்தலில் உதவுவதற்காக? கண் துடைப்பாக மாற்றப்படும் பிடிஓக்கள்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்