நிலக்கோட்டையில் குழந்தைகள் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி
11/19/2019 6:25:08 AM
வத்தலக்குண்டு, நவ. 19: நிலக்கோட்டையில் குழந்தைகள் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சைல்டு வாய்ஸ் தொண்டு நிறுவனம் சார்பாக நடந்த பேரணி துவக்க விழா நிகழ்ச்சிக்கு சைல்டு வாய்ஸ் தலைமை அறங் காவலர் அண்ணாதுரை தலைமை வகித்தார். நிலக்கோட்டை காவல்துறை சார்பு ஆய்வாளர் கண்ணாகாந்தி முன்னிலை வகித்தார். முதன்மை காவலர் தயாளன் பேரணியை துவக்கி வைத்தார். பெண் குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலை தவிர்க்கவும், கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் ஆவதை குறைக்கவும், நிலக்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கொண்டுவர வேண்டியும், பெருகி வரும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டியும், பாலியல் ரீதியாக சுரண்டல் மற்றும் வன்முறைகளை நிறந்தரமாக தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரி பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு கோஷமிட்டு பேரணி நடத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு மதுரை விடியல் குழந்தைகள் இயக்க பிரதிநிதிகள், நிலக்கோட்டை ஒன்றிய அளவிலான வளரினம் பெண்கள் குழுவின் பிரதிநிதிகள் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பேரணி நிலக்கோட்டை முக்கிய சாலைகள் வழியாக சென்று நிறைவடைந்தது. முடிவில் கூட்டமைப்பு தலைவி இந்திராணி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
கேங் மேன் உடல்தகுதி தேர்வு மழையால் தள்ளிவைப்பு
நீட் தேர்வு விண்ணப்பங்களை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் மாணவர்கள் கோரிக்கை
ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியில் குழித்தட்டு நாற்றங்கால் செயல்விளக்க முகாம்
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கியது
ஒட்டன்சத்திரம் அருகே சாலை பணி பள்ளத்தில் கவிழ்ந்து வாலிபர் பலி
நிலக்கோட்டை மகளிர் கல்லூரியில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்