பள்ளி மாணவியுடன் உல்லாசம் போக்சோவில் கல்லூரி மாணவன் கைது
11/14/2019 12:20:52 AM
சென்னை: சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி கடந்த 5ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் சக மாணவிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் மாணவி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் மாணவி காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அசோக் நகர் பகுதியை சேர்ந்த டிப்ளமோ படித்து வரும் 17 வயது கல்லூரி மாணவன், மாணவியை காதலித்து வந்ததும், இருவரும் கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் புதுச்சேரி, திருவண்ணாமலை, பெங்களூருக்கு சென்று அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு இருவரும் பணம் செலவு ஆனதால், வேறு வழியின்றி சென்னைக்கு திரும்பியுள்ளனர் என்பது தெரியவந்தது.இதனையடுத்து, போலீசார் மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது இருவரும் தனிமையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 17 வயது கல்லூரி மாணவன் மீது போலீசார் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், பள்ளி மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
நெல்லை, பொதிகையில் வரும் பயணிகள் எழும்பூர் வரை செல்ல கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
அரசு பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையில் திடீர் திடீரென பெயர்ந்து விழும் மேற்கூரை: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
புழல் ஏரி கால்வாயில் மூழ்கி வாலிபர் மாயம்
இஎஸ்ஐசி சார்பில் குறைதீர் கூட்டம்: 11ம் தேதி நடக்கிறது
‘யு டியூப்’ தகவல் மூலம் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடித்த இன்ஜினியர்: ரோந்து போலீசில் சிக்கினார்
அண்ணாநகர் பகுதியில் பைக் எண்ணை காரில் பொருத்தி சுற்றி திரிந்த வாலிபர் சிக்கினார்: சினிமா காட்சி போல் போலீசார் மடக்கினர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி