SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லாரி மோதி கம்பெனி உரிமையாளர் பலி

11/13/2019 8:37:32 AM

விருத்தாசலம், நவ. 13: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட ஆலடி ரோடு ஏபி நகரை சேர்ந்தவர் தணிகாசலம்(54). இவர் அதே பகுதியில் செராமிக் கம்பெனி நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று பைக்கில் கம்பெனிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது விருத்தாசலம்-ஆலடி ரோட்டில் பெரிய கண்டியன்குப்பம் குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த லாரி ஒன்று தணிகாசலம் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்த தணிகாசலத்தை அப்பகுதியினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்