SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிராம நிர்வாக அலுவலகம் அருகில் குப்பைகளை எரிப்பதால் காற்று மாசு

11/12/2019 5:54:35 AM

கரூர், நவ. 12: கிராம நிர்வாக அலுவலகம் அருகில் குப்பை எரிக்கப்பட்டதால் காற்றுமாசு ஏற்பட்டது.கரூர் அருகே உள்ளது காதப்பாறை ஊராட்சி. இந்த ஊராட்சி கரூர் நகராட்சியை ஒட்டி உள்ள ஊராட்சியாக இருக்கிறது. இங்கு குப்பை மேலாண்மை திட்டம் செயல்படுத்தவில்லை. தூய்மை திட்டத்தின்கீழ் குப்பை தொட்டிகள் புதிதாக வைக்கப்பட்டிருந்தும் முறையாக குப்பைகளை அள்ளுவதில்லை. குப்பைமேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படாததால் நேற்று காதப்பாறை கிராம நிர்வாக அலுவலகம் அருகிலேயே குப்பை எரிக்கப்பட்டது.இதனால் காற்றுமாசு ஏற்பட்டது. கிராம நிர்வாக அலுவலகம் அருகே குவிக்கப்பட்டிருந்த குப்பைக்கு தீ வைத்ததால் புகை மண்டலம் நீண்டநேரமாக காணப்பட்டது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2020

    19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-01-2020

    18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-01-2020

    17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Madurai Avaniyapuram Jallikattu

    15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

  • 15-01-2020

    15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்