SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் டெங்கு களப்பணியாளர்கள் ஆய்வு

11/8/2019 6:50:58 AM


கோவில்பட்டி. நவ.8:கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் டெங்கு களப்பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.கோவில்பட்டி நகராட்சி 36 வார்டு பகுதியிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து வார்டு பகுதிகளிலும் மகளிர் குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 85 களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வீட்டைச் சுற்றியிலும், மொட்டை மாடியிலும் மழைநீர் தேங்கி டெங்கு காய்ச்சல் பரப்புகின்ற ஏடிஸ் வகை கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ள பிளாஸ்டிக் காலி டப்பாக்கள், சிரட்டைகள், பாட்டில்கள், டயர்கள் முதலிய பயன்பாட்டில் இல்லாத பொருட்களை அகற்றியும், தண்ணீர் தேக்கி வைத்துள்ள பேரல்கள், சிமென்ட் தொட்டிகள், குடிநீர் இணைப்புத் தொட்டிகள், கீழ்நிலை நீர் தேக்கத்தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை ஆய்வு செய்தும், அபேட் கரைசல் தெளித்தும், கொசுப்புழு ஒழிப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

   நேற்று நகராட்சி 26, 27வார்டுக்குட்பட்ட வீரவாஞ்சிநகர் பகுதிகளிலும், 9,10வார்டுக்குட்பட்ட வள்ளுவர்நகர் பகுதிகளிலும், நடைபெற் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை பொது சுகாதாரத்துறை மாவட்ட பயிற்சி மைய மருத்துவ அலுவலர் வர்த்தீஸ்வரி, துணை இயக்குநரக புள்ளியியல் அலுவலர் அமுதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது நகர்நல மைய மருத்துவர் அப்துல், நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ், சுரேஷ்குமார், மேற்பார்வையாளர்கள், முருகன், குருசாமி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் மகேந்திரன், இளையராஜா ஆகியோர் உடனிருந்தார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

  • victoriafallsdry2019

    தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்